/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெற்றோர் கண்டிப்பு; பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளிப்புபெற்றோர் கண்டிப்பு; பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு
பெற்றோர் கண்டிப்பு; பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு
பெற்றோர் கண்டிப்பு; பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு
பெற்றோர் கண்டிப்பு; பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு
ADDED : செப் 09, 2011 11:55 PM
பல்லாவரம் : சரியாகப் படிக்காததை, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:அனகாபுத்தூர், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ரத்தீஷ்.
டிரைவர். இவரின் மகள் வினிதா,15. குடும்ப வறுமை காரணமாக, எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார்.இந்நிலையில், வறுமையால் படிப்பை நிறுத்திய குழந்தைகள் கல்வி பயில்வதற்காக, அப்பகுதியில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு, வினிதா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வினிதாவிற்கு, சரியாக படிப்பு வராததால், அவரின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த வினிதா, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில், வீட்டிலேயே அவர் பிணமானார்.


