/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/அன்னா ஹஸாரே கைது கண்டித்து உண்ணாவிரதம்அன்னா ஹஸாரே கைது கண்டித்து உண்ணாவிரதம்
அன்னா ஹஸாரே கைது கண்டித்து உண்ணாவிரதம்
அன்னா ஹஸாரே கைது கண்டித்து உண்ணாவிரதம்
அன்னா ஹஸாரே கைது கண்டித்து உண்ணாவிரதம்
ADDED : ஆக 17, 2011 01:36 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடைத்தெருவில் அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வலுவற்ற லோக்பால் மசோதாவை எதிர்த்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அக்னி பொதுநல சங்கம் சார்பில் அதன் ஒன்றிய தலைவர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது.
நாகை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பொதுநல ஆர்வலர் சோமு இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் செல்வராசு, ஒருங்கிணைப்பாளர் முள்ளாட்சி சக்தி, மாநில மீனவர் நல செயலாளர் பழனிவேல்ராஜன், மாவட்ட தலைவர் கார்த்திக், துணைச்செயலாளர் வேல்முருகன், ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், திருத்துறைப்பூண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.