Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மூணாறில் ரோட்டில் காட்டுயானை : சுற்றுலாப் பயணிகள் ஓட்டம்

மூணாறில் ரோட்டில் காட்டுயானை : சுற்றுலாப் பயணிகள் ஓட்டம்

மூணாறில் ரோட்டில் காட்டுயானை : சுற்றுலாப் பயணிகள் ஓட்டம்

மூணாறில் ரோட்டில் காட்டுயானை : சுற்றுலாப் பயணிகள் ஓட்டம்

ADDED : ஜூலை 14, 2011 12:45 AM


Google News

மூணாறு : மூணாறு பகுதியில், சாலையில் காட்டு யானை நடந்து வருவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மூணாறு நகர் பகுதியில், இரண்டு வாரங்களாக காட்டு யானை ஒன்று, இரவு நேரங்களில் தீவனத்திற்காக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், பழைய மூணாறு பகுதியில், சி.எஸ்.ஐ., சர்ச் எதிரில், சாலையில் காட்டு யானை நடந்து வருவதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின், அங்கிருந்து நியூ மூணாறு டிவிஷன் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானை புகுந்தது. அங்கு இரவு முழுவதும் மனோகரன், பவுன்ராஜ், வீரபுத்திரன், சண்முகவேல், பீல்டு ஆபீசர் ரெச்சார்ட் ஆகியோரது தோட்டங்களில் உள்ள வாழை, ஸ்டிராபெரி, காப்பி, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களையும், தனியார் கம்பெனிக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையின் தடுப்பு வேலியையும் சேதப்படுத்தியது. அங்கிருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில், காட்டிற்குள் சென்றது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us