/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கட்சியினர் மீதான வழக்குகளை சந்திக்க தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனைகட்சியினர் மீதான வழக்குகளை சந்திக்க தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனை
கட்சியினர் மீதான வழக்குகளை சந்திக்க தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனை
கட்சியினர் மீதான வழக்குகளை சந்திக்க தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனை
கட்சியினர் மீதான வழக்குகளை சந்திக்க தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனை
ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : தி.மு.க., வினர் மீதான பொய் வழக்குகளை எதிர்கொள்வது குறித்து வக்கீல்கள் அணியினர் ஆலோசனை நடத்தினர்.தி.மு.க., மாவட்ட வக்கீல்கள் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.
தி.முக., மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். வக்கீல் கல்பட்டு ராஜா வரவேற்றார். மாநில சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்புரையாற்றினார்.மாவட்ட, வட்டார அளவில் வக்கீல்கள் சங்கங்களை உருவாக்க வேண்டும். அ.தி.மு.க., அரசால் போடப்படும் பொய் வழக்குகளை எதிர் கொள்ள வக்கீல்கள் அணி தி.மு.க.,வினருக்கு துணையாக இருந்து செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஆதி சங்கர் எம்.பி., மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, புஷ்பராஜ், மஸ்தான், வக்கீல்கள் தங்கம், ஷெரீப், வெங்கடாஜலபதி, திருநாவுக்கரசு, அங்கையற்கன்னி, அசோகன், கண்ணப்பன், சேதுநாதன், நடராஜன், நாகராஜன், தமிழ்செல்வன், சிங்காரவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் கோதண்டபாணி நன்றி கூறினார்.