ADDED : ஜூலை 24, 2011 09:27 PM
காரைக்குடி : கோவிலூர் பாரத் ஐ.டி.ஐ., யில் இலவச தொழிற்பயிற்சியில் சேர இன்றும், நாளையும் நேர்முக தேர்வு நடக்கிறது.
இங்கு, எலக்ட்ரிக்கல் ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் பிரிவுகளுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க அரசு அனுமதித்துள்ளது. தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்கள் இன்றும், நாளையும் (ஜூலை 25, 26) சான்றிதழ், 3 புகைப்படத்துடன் நேரில் வருமாறு, தாளாளர் விஸ்வநாதகோபாலன் தெரிவித்தார். தொடர்புக்கு 99422 47769, 04565- 236444. ஆக., 3ல் பயிற்சிகள் துவங்குகின்றன.