/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/புதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு: எம்.பி., பங்கேற்புபுதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு: எம்.பி., பங்கேற்பு
புதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு: எம்.பி., பங்கேற்பு
புதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு: எம்.பி., பங்கேற்பு
புதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு: எம்.பி., பங்கேற்பு
ADDED : ஜூலை 31, 2011 01:15 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் உம்பளப்பாடி பஞ்சாயத்து இளங்கார்குடியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் நான்கு லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவுக்கு கும்பகோணம் ஆர்.டி.ஓ., அசோக்குமார் தலைமை வகித்தார்.
பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.பொன் விழா கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கோவிந்த நாட்டுச்சேரி பஞ்சாயத்து புத்தூர் கிராமத்தில் உள்ள புதிய பறவை சுய உதவிக்குழு மற்றும் புதிய முயற்சி உதவிக் குழுவுக்கு தலா ரூபாய் மூன்று லட்சம், கபிஸ்தலம் பஞ்சாயத்து அன்னை இந்திரா உதவிக்குழுவுக்கு ரூபாய் நான்கு லட்சம் பொருõளாதாரக் கடன் ஆக மொத்தம் ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான பொருளாதார கடனுதவிகளை மயிலாடுதுறை எம்.பி., மணியன் வழங்கி பேசியதாவது:மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கிராமபுற மக்களுக்க எல்லா வகையிலும் உதவுகிற திட்டங்களை தர வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் நோக்கம். இன்றைய நிகழ்ச்சியில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைளை மனுக்களாக முன் வைத்து இருக்கிறார்கள். முதியோர் உதவித் தொகை வேண்டி அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.அரசின் பல்வேறு உதவித் தொகைகள் பெற விரும்புவோர் முறையான விண்ணப்பங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது விரைவாக நடிவடிக்கை எடுக்கப்படும், என்றார்.தஞ்சை எம்.எல்.ஏ., ரெங்கசாமி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா இலவச அரிசி, படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டி இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா மக்களின் ஒட்டு மொத்த நலனை காக்க செயல்படுகிறார், என்றார்.பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, யூனியன் தலைவர் சேதுராமன், உம்பளப்பாடி பஞ்சாயத்து தலைவர் செல்வராசு பங்கேற்றனர்.


