Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொடைக்கானல் போலீசார் மீது... நம்பிக்கை போச்சு : வழிபாட்டு தலங்களில் தொடர் கொள்ளை

கொடைக்கானல் போலீசார் மீது... நம்பிக்கை போச்சு : வழிபாட்டு தலங்களில் தொடர் கொள்ளை

கொடைக்கானல் போலீசார் மீது... நம்பிக்கை போச்சு : வழிபாட்டு தலங்களில் தொடர் கொள்ளை

கொடைக்கானல் போலீசார் மீது... நம்பிக்கை போச்சு : வழிபாட்டு தலங்களில் தொடர் கொள்ளை

ADDED : ஆக 11, 2011 10:37 PM


Google News

கொடைக்கானல் : கொடைக்கானலில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து கொள்ளை அடிக்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

எதைப்பற்றியும் கவலை இன்றி போலீசார் மெத்தனமாக இருப்பதால், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். கொடைக்கானலில் வழிபாட்டு தலங்களில் உண்டியல் உடைப்பு சம்பவங்கள், சில மாதங்களாக அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் ஒரே இரவில் மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயில்; அண்ணாசாலை பெருமாள் கோயில்களில் கதவை உடைத்து திருட முயற்சி நடந்தது. அடுத்த இரு நாட்களில் சி.எஸ்.ஐ., ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடுபோனது. இதே போல ஜூனில் சீனிவாசபுரம் சர்ச், நாயுடுபுரம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்தனர். அலட்சியம்:அப்போதே துரித நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தால், அடுத்த சம்பவங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், போலீசார் ஏனோ, மெத்தனமாகவே உள்ளனர். கடந்த ஆண்டில், பழமையான புனித சலேத் அன்னை ஆலயத்தில் சிலைக்கு பின்னால் உள்ள கண்ணாடியை உடைத்து பணம் திருடப்பட்டது. இவ்வழக்கில் போலீசாரின் விசாரணை தற்போது வரை, பூஜ்யம். அச்சம்: தொடர் திருட்டால் பீதியடைந்துள்ள மக்கள், வழிபாட்டு தலங்களில் நிகழும் சம்பவங்களால், போலீசார் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். இதற்கு கட்டியம் கூறுவது போல, விசாரணையும் கண்துடைப்பாக உள்ளது.



பொறுப்பு: சர்வதேச சுற்றுலா தலத்தில் அரங்கேறும் திருட்டுக்களால், பயணிகள் வருகை குறையும் வாய்ப்பு உண்டு. இதை குற்ற வழக்கு என்ற அளவில் மட்டும் அணுகாமல், சுற்றுலாத்தலத்தை பாதுகாக்கும் பெரிய பொறுப்பு என்ற ரீதியில் கையாள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்வதுடன், தொடர் திருட்டு நடக்காமல் போலீசார் காண்காணிக்க வேண்டும். இதற்கு சிறப்பு படை அமைக்க வேண்டியது அவசியம். சந்திரசேகரன் எஸ்.பி., என்ன செய்யப்போகிறார்?









      Our Apps Available On




      Dinamalar

      Follow us