/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பாளையம்-அரவக்குறிச்சி ரோடு அகலப்படுத்த கோரிக்கைபாளையம்-அரவக்குறிச்சி ரோடு அகலப்படுத்த கோரிக்கை
பாளையம்-அரவக்குறிச்சி ரோடு அகலப்படுத்த கோரிக்கை
பாளையம்-அரவக்குறிச்சி ரோடு அகலப்படுத்த கோரிக்கை
பாளையம்-அரவக்குறிச்சி ரோடு அகலப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 11, 2011 10:37 PM
குஜிலியம்பாறை : பாளையம்-அரவக்குறிச்சி ரோட்டில் வாகன போக்குவரத்து, விபத்து அதிகரித்துள்ளதால், இரு வழியாக அகலப்படுத்த வேண்டும்.
பாளையத்தில் இருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்லும் ரோடு, ஒரு வழியாக உள்ளது. தாரபுரம், பழனிக்கு செல்ல இந்த ரோடு குறுக்கு வழி என்பதால், வாகன போக்குவரத்து அதிகம். இந்த வழி தடத்தில் சிமென்ட் ஆலை, கல் குவாரி லாரிகள், அதிக பாரங்களை ஏற்றி செல்கின்றன. மேலும், பாளையம், சேர்வைகாரன்பட்டி, ஆர்.வெள்ளோடு, ஆத்துமேட்டில் வாரச்சந்தை, முறுங்கைக்காய் சந்தை நடப்பதால், மற்ற வாகன போக்குவரத்தும் அதிகம். இது ஒரு வழி ரோடாக இருப்பது மட்டுமின்றி, ஓரத்தில் ஒரு அடி உயரத்திற்கு உள்ளதால், டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. கிராமத்தினரின் நலன் கருதி, இரு வழி ரோடாக மாற்ற வேண்டும்.


