Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேவர் குருபூஜைக்கு செல்ல மாற்று வழி எஸ்.பி.,களுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேவர் குருபூஜைக்கு செல்ல மாற்று வழி எஸ்.பி.,களுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேவர் குருபூஜைக்கு செல்ல மாற்று வழி எஸ்.பி.,களுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேவர் குருபூஜைக்கு செல்ல மாற்று வழி எஸ்.பி.,களுக்கு ஐகோர்ட் உத்தரவு

ADDED : ஆக 12, 2011 02:57 AM


Google News
மதுரை:ராமநாதபுரம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜைக்கு செல்ல மாற்று வழி கோரியவர்களை அழைத்து பேசி, இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் எஸ்.பி.,களுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.விருதுநகரை சேர்ந்த மங்களேஸ்வரன் உட்பட 12 பேர் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜைக்கு திருச்சுழி, பனையூர், சேதுபுரம், ஆனைக்குளம், முத்துராமலிங்கபுரம், மண்டலமாணிக்கம், கமுதி வழியாக செல்ல முன்பு போலீசார் அனுமதியளித்தனர். இதன் தூரம் 25 கி.மீ., தற்போது திருச்சுழி, ராமலிங்காமில், கல்லூரணி, கானாவிலக்கு, கமுதி வழியாக

பசும்பொன் செல்ல தற்போது போலீசார் அனுமதிஅளித்துள்ளனர். இதன் தூரம் 100 கி.மீ.,அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளதால் மக்கள் சிரமம் அடைவர். இதற்கு தடை விதித்து முன்பு இருந்த வழியிலேயே பசும்பொன் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும், என கோரினர்.மனு நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ''ராமநாதபுரம், விருதுநகர் எஸ்.பி.,க்கள் மனுதாரர்களை அழைத்து பேசி முடிவெடுத்து, இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என, உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us