/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தம்மம்பட்டி,முள்ளுகுறிச்சியில் நில அதிர்வு கிராம மக்கள் பீதிதம்மம்பட்டி,முள்ளுகுறிச்சியில் நில அதிர்வு கிராம மக்கள் பீதி
தம்மம்பட்டி,முள்ளுகுறிச்சியில் நில அதிர்வு கிராம மக்கள் பீதி
தம்மம்பட்டி,முள்ளுகுறிச்சியில் நில அதிர்வு கிராம மக்கள் பீதி
தம்மம்பட்டி,முள்ளுகுறிச்சியில் நில அதிர்வு கிராம மக்கள் பீதி
ADDED : ஆக 13, 2011 12:59 AM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதிகளில், இரண்டாவது முறையாக ஏற்பட்ட நில
அதிர்வால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.ராசிபுரம் அடுத்த
திம்மநாயக்கன்பட்டி, முள்ளுகுறிச்சி, மங்களபுரம், மெட்டாலா,
நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த ஜூன்
மாதம் நில அதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.45 மணிக்கு,
ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி, தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி
உள்ளபட்ட பகுதிகளில், அதிவேகத்தில் ரயில் வருவதுபோல் பூமி அதிர்ந்தது.
அதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலஅதிர்வில், கட்டனாச்சம்பட்டி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு
உற்பத்தி விற்பனை சங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.
மேலும், இக்கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஒருசில வீடுகளில்
லேசான விரிசல்கள் காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட நில அதிர்வின்
பயத்தில் இருந்து மீளாமல் உள்ள நிலையில், மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டதால்,
கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


