சென்னை - நாகர்கோவில் விழாக்கால சிறப்பு ரயில்
சென்னை - நாகர்கோவில் விழாக்கால சிறப்பு ரயில்
சென்னை - நாகர்கோவில் விழாக்கால சிறப்பு ரயில்
ADDED : ஆக 13, 2011 01:13 AM

மதுரை : சென்னை - நாகர்கோவில் இடையே ஓணம், ரம்ஜான் விழாக்காலத்தை முன்னிட்டு, பயணிகள் நெரிசலை சமாளிக்க வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் ஆக., 16, 23, 30 செப்., 6, 13, 20, 27, அக்., 4, 11 தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவிலில் ஆக., 17, 24, 31 செப்., 7, 14, 21, 28 அக்., 5, 12 தேதிகளில் மாலை 5.05க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.25க்கு சென்னை செல்லும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை, ஆரல்வாய்மொழி ஸ்டேஷன்களில் இந்த ரயில்கள் நிற்கும். நாகர்கோவில் - சென்னை ரயில் மட்டும் பெரம்பலூரில் நிற்கும்.


