காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்
காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்
காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்
புதுடில்லி : காமன்வெல்த் ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
இந்த ஊழலில், பரிதாபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர்கள் புரு÷ஷாத்தம் ஆரியா, ஏ.கே.மதன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களை சி.பி.ஐ., தேடி வந்தது. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால், அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ., கோர்ட் அறிவித்தது. இதற்கிடையே, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இருவருக்கும் முன் ஜாமின் அளிக்க, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில், ஆரியாவும், மதனும் டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை கோர்ட் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இவர்களுக்கு தேவையான மருந்துகளை அளிக்க சிறை நிர்வாகத்தை கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.