Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வரி விதிப்பை நீக்க கோரிக்கை

வரி விதிப்பை நீக்க கோரிக்கை

வரி விதிப்பை நீக்க கோரிக்கை

வரி விதிப்பை நீக்க கோரிக்கை

ADDED : ஆக 21, 2011 11:42 PM


Google News
மடத்துக்குளம் : விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களுக்கு, 'வாட்' வரிவிதிப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த திருப்பூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டருக்கு வழங்கிய கோரிக்கை மனு: விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தும் ஏர் கம்பரசர், மின் மோட்டார், பம்பு செட்கள், விவிசி பைப்புகள் மற்றும் ஒயர்கள் உட்பட மின்சாதனப் பொருட்களுக்கு, 'வாட்' வரி

நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பொருட்களை அதிகளவு விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகள் பயன்படுத்தும் குறிப்பிட்ட மின்சாதனப் பொருட்களுக்கு 'வாட்' வரி விதிப்பை நீக்க வேண்டும். அடுத்ததாக, மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. நிலங்களை ஆய்வு செய்து மீட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us