/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும்'"காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும்'
"காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும்'
"காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும்'
"காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும்'
ADDED : ஆக 21, 2011 11:52 PM
கோவை : 'கருவூலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்'
என்று கோரி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தினர் தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர். ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு
கூட்டம், தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர்
ராஜேஸ்வரன் வரவேற்றார். செயலாளர் ரங்கராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், ஓய்வூதியர்களின் நலன் காக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர
வேண்டும். ஓய்வூதியர் குறைகளை சங்கப் பொறுப்பாளர்களுடன் பேசித் தீர்வு காண
அரசு முன்வர வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் தற்போது வழங்கும் 25 ஆயிரம்
ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்திட வேண்டும். மருத்துவ உதவித்திட்டத்துக்கு
நான்கு லட்சம் ரூபாய் என அனுமதிக்க வேண்டும். கருவூலக அலுவலர்கள்,
ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் முடித்துத்தரவும், நேர்காணல் முறையை
எளிமையாக்கவும் முன்வர வேண்டும். கருவூலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
பூர்த்தி செய்ய வேண்டும்.
மூத்தோருக்கு தேர்தல் வாக்குறுதிப்படி இலவச பஸ் பாஸ் வழங்க உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சண்முகம் நன்றி கூறினார். மாநிலத் தலைவர் சாகுல் அமீது, துணைத் தலைவர்
சரவணன், உள்ளாட்சி தணிக்கைத் துறை முன்னாள் இயக்குனர் மோகன் மற்றும் சங்க
நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


