Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/அதிகாரி மீது போலீஸில் புகார் காப்பகத்தில் இருக்கும் மகளை பார்க்க அனுமதி மறுப்பு

அதிகாரி மீது போலீஸில் புகார் காப்பகத்தில் இருக்கும் மகளை பார்க்க அனுமதி மறுப்பு

அதிகாரி மீது போலீஸில் புகார் காப்பகத்தில் இருக்கும் மகளை பார்க்க அனுமதி மறுப்பு

அதிகாரி மீது போலீஸில் புகார் காப்பகத்தில் இருக்கும் மகளை பார்க்க அனுமதி மறுப்பு

ADDED : ஆக 28, 2011 01:14 AM


Google News

சேலம்: சேலம் பெண்கள் காப்பதகத்தில் உள்ள தணீஞூ மகளை பார்க்க அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதாக, பெண் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தங்கட்டியை சேர்ந்தவர் நாகம்மா(50). இவர், நேற்று முன்தினம் வக்கீல் ஒருவருடன் சூரமங்கலம் போலீஸில் மனு அளிக்க வந்தார். அவர் அளித்த மனுவை போலீஸார் வாங்க மறுத்ததால், மனுவை பதிவு தபாலில் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில், என் மகள் அம்மு, 1993ம் ஆண்டு பிறந்தார். அவளுக்கு 18 வயது பூர்த்தியானதை அடுத்து, ஓமலூர், செம்மாண்டம்பட்டியில் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தேன். ஆனால், எனது மகளுக்கு 18 வயது பூர்த்தி ஆக வில்லை எனக் கூறி, சிலர் அழைத்துச் சென்று சூரமங்கலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து விட்டனர். பலமுறை காப்பாகத்திற்கு சென்று, என் மகளை பார்க்க முயன்ற போது, அனுமதி மறுக்கின்றனர்.



என் மகள் வைத்திருந்த பணம், நகைகளை பறித்துக் கொண்டனர். என்னை பார்க்கவும் அனுமதி மறுத்து வருகின்றனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரியிடம் முறையிடவும் மறுக்கப்படுகிறது. என் மகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால், தன் வாழ்க்கை குறித்து முடிவு எடுக்கும் நிலையில் உள்ளார். எனவே, என்னை சந்திக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளை பார்க்க அனுமதி மறுக்கும் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us