திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 28, 2011 10:32 AM
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.
திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், வீதி உலா உள்ளிட்டவைகள் நடந்தது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10வது நாளில், இன்று காலை நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருளி, ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தார். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


