Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/புதிய பிரதமராக பட்டாராய் பதவியேற்பு

புதிய பிரதமராக பட்டாராய் பதவியேற்பு

புதிய பிரதமராக பட்டாராய் பதவியேற்பு

புதிய பிரதமராக பட்டாராய் பதவியேற்பு

ADDED : ஆக 29, 2011 10:22 PM


Google News

காத்மாண்டு:நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாபுராம் பட்டாராய், 57, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அந்நாட்டில் நீண்ட கால அரசியல் இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.நேபாளத்தில் கடந்த 2006ல் மன்னராட்சி கவிழ்க்கப்பட்ட பின் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. மன்னராட்சிக்குப் பின் பதவியேற்ற பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி, 2009ல் கவிழ்ந்தது. அதையடுத்து அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியல் இழுபறி தொடர்ந்தது.இந்நிலையில், அந்நாட்டின் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்தொற்றுமையின்படி, அரசியலமைப்புச் சபை, டாக்டர். பாபுராம் பட்டாராயை பிரதமராகத் தேர்வு செய்தது. இந்தத் தேர்வுக்கு, மாதேஷி கட்சி, மாவோயிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்தது.இன்றுஜனாதிபதி ராம் பரன் யாதவ் அலுவலகத்தில் பட்டாராய் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக மாதேஷி கட்சியின் பிஜய் குமார் கச்சாதரும் பதவியேற்றுக் கொண்டார்.கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சரவை விரிவு செய்யப்படும். மாவோயிஸ்ட் கட்சி தலைவரான பிரசண்டாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பட்டாராய், மாதேஷி கட்சியைச் சமாளித்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us