/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு சாய ஆலை உரிமையாளர்கள் தகவல்ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு சாய ஆலை உரிமையாளர்கள் தகவல்
ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு சாய ஆலை உரிமையாளர்கள் தகவல்
ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு சாய ஆலை உரிமையாளர்கள் தகவல்
ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு சாய ஆலை உரிமையாளர்கள் தகவல்
ADDED : ஆக 30, 2011 12:47 AM
திருப்பூர் : ''பொது சுத்திகரிப்பு நிலையங்கள் தயாரித்து வரும் தொழில்நுட்ப திட்ட அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 'பிரெய்ன் சொல்யூஷன்' தொழில்நுட்பம், 'நானோ பில்ட்ரேஷன்' தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் இயக்கி, தகுதியானவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும், அதற்காக, 200 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், 'பிரெய்ன் சொல்யூஷன்' தொழில்நுட்பங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 'நானோ பில்ட்ரேஷன்' தொழில் நுட்பம் குறித்து, குஜராத் சென்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.சாய ஆலை உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையால், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்புக்கு சாதகமாக உள்ள, வேறு சில தொழில்நுட்பங்களையும் அரசு அனுமதித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. அமைச்சர்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில், ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்துக்கும் மாறுபட்ட திறனுள்ள கழிவுநீர் வருகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீரின் தன்மை, சுத்திகரிப்பு முறை, முடிவுகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.
பொது சுத்திகரிப்பு நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள், திட்ட அறிக்கை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். முறையான அனுமதி கிடைத்ததும், அரசு வழங்கும் தொகையை, கழிவுநீர் கொள்திறன் அடிப்படையில் பகிர்ந்து, தொழில்நுட்ப கட்டமைப்பு பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், ''பொது சுத்திகரிப்பு நிலையங்களின் திட்ட அறிக்கை ஒரு வாரத்துக்குள் முழுமையாக தயாராகி விடும். அரசிடம் சமர்ப்பித்த பின், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துடன் ஆலோசித்து முறையாக அனுமதி வழங்கப் படும். அதன் பின், வட்டியில்லா கடன் தொகை 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலையங்களில், கழிவுநீர் கொள்திறன் அடிப்படையில், சுத்திகரிப்பு மேம்பாட்டுக்காக கடன் தொகை பயன்படுத்தப்படும்,'' என்றார்.


