Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வெவ்வேறு விபத்து இருவர் பரிதாப பலி

வெவ்வேறு விபத்து இருவர் பரிதாப பலி

வெவ்வேறு விபத்து இருவர் பரிதாப பலி

வெவ்வேறு விபத்து இருவர் பரிதாப பலி

ADDED : செப் 01, 2011 11:34 PM


Google News

மணப்பாறை: மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பலியாகினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை கொட்டப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி. இவரது மகன் மணிகண்டன் (7). அதே பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறான். நேற்று மதியம் 2.30 மணியளவில், கொட்டப்பட்டி கடைவீதியில், சாலையோரமாக மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது, தோகைமலையில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த 'வள்ளிநாயகி' என்ற ரெகுலர் சர்வீஸ் லாரி மணிகண்டனின் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தான். மணப்பாறை இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.



இன்ஜினியர் பலி: ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (45). கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் காவிரி பாலம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே டிப்பர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். திருச்சி தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவு இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் செல்லையனை கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us