பரத அரங்கேற்றத்தில் மாணவியர் அசத்தல்
பரத அரங்கேற்றத்தில் மாணவியர் அசத்தல்
பரத அரங்கேற்றத்தில் மாணவியர் அசத்தல்
ADDED : செப் 03, 2011 11:22 PM
குன்னூர் : 'முறையாக பரத நாட்டியம் கற்று தேர்ந்தால், உலகின் பல நாடுகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்', என நடன அரங்கேற்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குன்னூர் 'முத்ரா' நடனப்பள்ளியின் நடன அரங்கேற்றம், வெலிங்டன் பிருந்தாவன் பள்ளி அரங்கில் நடந்தது. பள்ளி முதல்வர் பவானி விஸ்வநாத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீலகிரி கலாச்சார சங்க தலைவர் சுந்தர் சான்றிதழ் வழங்கி பேசுகையில், ''நீலகிரியில் சுமார் 1,000 பேர் பரத நாட்டியம் கற்று வருகின்றனர். அவர்களில் சிலர் மட்டுமே அரங்கேற்றம் வரை செல்கின்றனர். அவர்களில் வெகு சிலரே அரங்கேற்றம் முடிந்த பின்பும் முறையாக பயிற்சியை தொடர்கின்றனர். பல நாடுகளில் பரத நாட்டியத்திற்கு தனி கவுரவம் உண்டு,'' என்றார். நடனப்பள்ளி மாணவிகள் அகிலா ஹர்ஷினி, அனுப்பிரியா, அர்ச்சனா, ஜோனா, சரஸ்வதி, வித்யா நடனமாடினர். கேரள இசை கலைஞர்களின் பின்னணி இசை மனதை கவர்ந்தது. நீலகிரி கலாச்சா சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன், பிருந்தாவன் பள்ளி முதல்வர் குருநாதன், துணை முதல்வர் பத்மா, ஜோசப் கான்வென்ட் பள்ளி முதல்வர் ஜோஸ்பின், வெலிங்டன் புனித ஜோசப் தேவாலய பாதிரியார் பிரான்சிஸ், புல்மோர் பள்ளி தாளாளர் புல்மோர் உட்பட பலர் பங்கேற்றனர். முத்ரா நடனப் பள்ளி நிறுவனர் பவானி விஸ்வநாத் நன்றி கூறினார்.


