/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இந்து அறநிலையத்துறை அதிரடி கோவில் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கு ஏலம்இந்து அறநிலையத்துறை அதிரடி கோவில் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கு ஏலம்
இந்து அறநிலையத்துறை அதிரடி கோவில் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கு ஏலம்
இந்து அறநிலையத்துறை அதிரடி கோவில் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கு ஏலம்
இந்து அறநிலையத்துறை அதிரடி கோவில் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கு ஏலம்
ADDED : செப் 06, 2011 10:27 PM
திட்டக்குடி ; திட்டக்குடி வைத்தியநாத சுவாமி நிலம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
கடந்த 40 ஆண்டுகளாக திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலுக்குட்பட்ட வதிஷ்டபுரம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 3.43 ஏக்கர் நிலம் 89 ரூபாய்க்கும், 80 சென்ட் நிலம் 69 ரூபாய்க்கும் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இதனையடுத்து செயல் அலுவலர் ராணி கோவில் நில குத்தகையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பொது ஏலத்திற்கு கொண்டு வந்தார். அதன்படி கடந்த 5ம் தேதி மாலை வதிஷ்டபுரம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில் மாவட்ட உதவி ஆணையர் ஜெகன்னாதன், செயல் அலுவலர் ராணி முன்னிலையில் பொது ஏலம் நடந்தது.
ஏல இறுதியில் 3.43 ஏக்கர் நிலம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 195 ரூபாய்க்கும், 80 சென்ட் நிலம் 20 ஆயிரத்து 835 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் குத்தகை ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள் ஆகும். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 185 ஏக்கர் பரப்பில் விளை நிலங்களுக்கு சொற்ப தொகையே குத்தகையாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பொது ஏலத்திற்கு கொண்டு வந்தால் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.


