Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தி.மு.க.,வில் சீட் கிடைக்காத வி.ஐ.பி., கவுன்சிலர்கள் : துணைமேயருக்கே வாய்ப்பு இல்லை

தி.மு.க.,வில் சீட் கிடைக்காத வி.ஐ.பி., கவுன்சிலர்கள் : துணைமேயருக்கே வாய்ப்பு இல்லை

தி.மு.க.,வில் சீட் கிடைக்காத வி.ஐ.பி., கவுன்சிலர்கள் : துணைமேயருக்கே வாய்ப்பு இல்லை

தி.மு.க.,வில் சீட் கிடைக்காத வி.ஐ.பி., கவுன்சிலர்கள் : துணைமேயருக்கே வாய்ப்பு இல்லை

ADDED : செப் 26, 2011 09:07 PM


Google News

சென்னை மாநகராட்சியின் துணைமேயரான சத்யபாமா உள்ளிட்ட தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் பலருக்கு, உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்கவில்லை.

இதனால், கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் ரவிச்சந்திரனுக்கு, 38வது வார்டில் கவுன்சிலர் சீட் கிடைத்துள்ளது. துணை மேயர் சத்யபாமா கடந்த தேர்தலில், 25வது வார்டில் வென்றார். இது, தற்போது, 56வது வார்டாகி விட்டது. இங்கு, வக்கீல் சுபாஷ் சந்திர போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, வெற்றிக்கு பின், தி.மு.க.,வில் சேர்ந்தவர் ஆவார். துணை மேயர் சத்யபாமா, பெரிய அளவில் கட்சிப்பணியாற்ற வில்லை என, புகார் எழுந்ததால், அவருக்கு சீட் தரவில்லை என கூறப்படுகிறது.



விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 130வது வார்டில், வெற்றி பெற்ற தனசேகரனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில் லை. நில அபகரிப்பு வழக்கில், தனசேகரன் கைதாகி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளதால், அவர் சீட் கேட்கவில்லை. மாவட்ட பொறுப்பாளருக்கு சீட் இல்லை: வடசென்னை தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.,சேகர் 2வது வார்டு கவுன்சிலராக இருந்தார். அவருக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை. சென்னை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் ராமலிங்கம் 75வது வார்டில் வென்றார்; 105 ஆக மாற்றப்பட்டுள்ள இந்த வார்டில், அதியமான் வேட்பாளராகியுள்ளார்.



ஆற்காடு வீராசாமியின் ஆதரவாளரான ராமலிங்கத்தின் மீது, கட்சி தலைமை அதிருப்தியில் உள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறியுள்ளன. கோபாலபுரத்தில் குழப்பம்: தி.மு.க., தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதி, கடந்த முறை 110வது வார்டாக இருந்தது. இங்கு வெற்றிபெற்ற லில்லி சமாதானத்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 86வது வார்டில் வெற்றி பெற்ற சுரேஷ்குமாருக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை. இந்த வார்டு 114வது வார்டாக மாற்றப்பட்டு, மதிவாணனுக்கு சீட் கிடைத்துள்ளது. கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தொகுதிப்பணிகளை கவனிக்கும் பொறுப்பு, சுரேஷ்குமாரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கட்சியினர் மத்தியில் எதேச்சதிகாரமாக நடந்து கொண்டார் என, தலைமைக்கு புகார் வந்ததால், சீட் தரவில்லை என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



சேப்பாக்கம் தொகுதியில் வெட்டி கொல்லப்பட்ட கவுன்சிலர் சேரனின் 93வது வார்டு, 119 வது வார்டாக மாறியுள்ளது. இங்கு போட்டியின்றி வென்ற சேரனின் மனைவி அருண்மொழிக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை. இங்கு கவுன்சிலர் துரையின் மனைவி செல்வி வேட்பாளராகியுள்ளார். சென்னை மேயர் சுப்பிரமணியன் போட்டியிட்ட சைதாப்பேட்டை 140வது வார்டு, 170வது வார்டாகியுள்ளது. சுப்பிரமணியன் மேயர் பதவிக்கு நேரடியாக போட்டியிடுவதால், இங்கு ஆர்.டி., மூர்த்தி களத்தில் உள்ளார். தென்சென் னை மாவட்ட செயலர் அன்பழகனின் ஆதரவாளரான மகேஷ்குமார் வென்ற 139வது வார்டு, 171ஆக மாற்றப்பட்டு, சைதை குணசேகரன் வேட்பாளராகியுள்ளார்.கட்சிக்காக உழைத்த வி.ஐ.பி.,க்கள் பலருக்கு சீட் தராதது, தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



- ஹெச்.ஷேக்மைதீன் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us