/உள்ளூர் செய்திகள்/தேனி/தடையற்ற குடிநீர் வினியோகம் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதிதடையற்ற குடிநீர் வினியோகம் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி
தடையற்ற குடிநீர் வினியோகம் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி
தடையற்ற குடிநீர் வினியோகம் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி
தடையற்ற குடிநீர் வினியோகம் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 07, 2011 10:45 PM
வருஷநாடு : பாலுத்து, துரைச்சாமி புரம்,ஆத்தாங்கரைப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தடையில்லாத குடிநீர் வினியோகம் செய்து கொடுக்கப்படும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என கடமலை குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியக்குழு உறுப்பினர் 3-வதுவார்டு பதவி பேட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் முருக்கோடை ராமர் கூறினார். அவர் கூறியது:மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக முதல்வரின் ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன். அவர் அறிவித்த அனைத்து நலத் திட்டங்களையும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். பாலூத்து, அய்யனார்புரம், தேவராஜ்நகர், கொம்புக்காரன் புலியூர், துரச்சாமிபுரம், அண்ணாநகர் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களை நவீனப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வறட்சி காலங்களிலும் தடையில்லாமல் கிடைக்க செய்வேன். துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு புதிய சமுதாயக்கூடம் கட்டிக் தரப்படும். எந்த பிரச்சினை என்றாலும் என்னை தொடர்புகொண்டால் உடனடி தீர்வு காணப்படும். இவ்வாறு ராமர் கூறினார்.


