/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தல் பயிற்சியில் குழப்பம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆத்திரம்உள்ளாட்சி தேர்தல் பயிற்சியில் குழப்பம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆத்திரம்
உள்ளாட்சி தேர்தல் பயிற்சியில் குழப்பம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆத்திரம்
உள்ளாட்சி தேர்தல் பயிற்சியில் குழப்பம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆத்திரம்
உள்ளாட்சி தேர்தல் பயிற்சியில் குழப்பம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆத்திரம்
ADDED : அக் 07, 2011 10:52 PM
சிவகங்கை : தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு அழைப்பு அனுப்பியதில் அலுவலர்களுக்குள் குளறுபடி ஏற்பட்டதால், ஆசிரியர்கள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓட்டுப்பதிவு குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.சிவகங்கை மாவட்டத்தில் 18 இடங்களில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் என மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலரால் பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
சிவகங்கை நகராட்சி கமிஷனர் மூலம் 7 ம்தேதி காலை 10 மணிக்கு எம். எம்.கே., திருமண மகாலில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிக்கை அனுப்பபட்டு இருந்தது. பயிற்சியில் கலந்து கொள்ள அசிரியர்கள், அரசு அலுவலர்கள் மகாலுக்கு நேற்று காலை 9.30 மணிக்கு வந்தனர். மகால் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் தொடர்பான அதிகாரிகள் இல்லாததால் நகராட்சி அலுவலகத்தில் கேட்ட போது, பயிற்சி வகுப்பு 10ம் தேதி நடைபெறும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தவர்கள், நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களை தொடர்பு கொண்ட போது, அங்கும் சரியான பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். பின்னர் நகராட்சி அலுவலர்கள் மகாலுக்கு வந்து ஆசிரியர்கள், அலுவலர்களை சமாதானம் செய்து பயிற்சி வகுப்புகளை நடத்தினர். தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இது போன்ற பிரச்னை ஏற்பட்டது.


