Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் புற்று நோய் மருத்துவ ஆலோசனை முகாம்

கோவில்பட்டியில் புற்று நோய் மருத்துவ ஆலோசனை முகாம்

கோவில்பட்டியில் புற்று நோய் மருத்துவ ஆலோசனை முகாம்

கோவில்பட்டியில் புற்று நோய் மருத்துவ ஆலோசனை முகாம்

ADDED : அக் 13, 2011 05:36 AM


Google News
தூத்துக்குடி: மதுரை அப்போலோ சிறப்பு ஆஸ்பத்திரி மற்றும் கோவில்பட்டி கமலா ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச புற்று நோய் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நாளை (14ம் தேதி) காலை கோவில்பட்டி கமலா ஆஸ்பத்திரியில் வைத்து நடக்கிறது.இம்முகாமில் மதுரை அப்போலோ சிறப்பு ஆஸ்பத்திரி, புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் சர்ப்பராஜன், மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

ஆறாத புண், குரலில் மாற்றம், நச்சரிக்கும் இருமல், சளியில் ரத்தம், விழுங்குவதில் தடை, மார்பில் மற்றும் வேறு இடங்களில் கட்டி மலம் மற்றும் சிறுநீரில் ரத்தப்போக்கு மாதவிலக்கில் மாற்றம், அதிக வெள்ளைப்படுதல், குழந்தைகளுக்கு தீராத காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மச்சத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களும், ஏற்கனவே புற்று நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us