அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்டோர் சேலம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்
அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்டோர் சேலம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்
அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்டோர் சேலம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்
ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
சேலம் : சேலம், அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்டோர், சேலம் கோர்ட்டில் நேற்று, ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
சேலம், அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 13 பேர் மீது, ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரணடைந்த நிலையில், இரண்டாவது நாளாக அவரிடம், நேற்று விசாரணை நடந்தது. அங்கம்மாள் காலனி விவகாரத்தில், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள், ஜே.எம்., கோர்ட் எண் 3க்கு, நேற்று அழைத்து வரப்பட்டனர். மாஜிஸ்திரேட் முரளிதரன் முன்னிலையில், அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட, 23 குடும்பத்தைச் சேர்ந்த 29 பேர், வாக்குமூலம் அளிக்க வந்தனர். ஒவ்வொருவரிடமும், தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. தற்போது பெறப்பட்டுள்ள வாக்குமூலம், எதிர்காலத்தில் சாட்சிகள் பிறழ்வதை தவிர்க்கும் முக்கிய ஆவணமாக இருக்கும் என கருதப்படுகிறது.