இங்கிலாந்து தொடர் அவ்வளவு கஷ்டமில்லை: ஸ்ரீசாந்த்
இங்கிலாந்து தொடர் அவ்வளவு கஷ்டமில்லை: ஸ்ரீசாந்த்
இங்கிலாந்து தொடர் அவ்வளவு கஷ்டமில்லை: ஸ்ரீசாந்த்
ADDED : ஆக 20, 2011 10:21 AM
லண்டன்: தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடர் மிகவும் கஷ்டமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார். அதே நேரம் தன்னைப்பொறுத்தவரையில், கடந்த 2008ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கெதிரான டெஸ்ட் போட்டியையே தான் மிகவும் கடினமானதாக கருதுவதாகவும், தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடர் மிகவும் கஷ்டமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


