Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேசிய தபால் வார விழா 9ல் துவக்கம்

தேசிய தபால் வார விழா 9ல் துவக்கம்

தேசிய தபால் வார விழா 9ல் துவக்கம்

தேசிய தபால் வார விழா 9ல் துவக்கம்

ADDED : அக் 06, 2011 09:31 PM


Google News
கோவை : தேசிய தபால் வார விழா, வரும் 9ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.கோவை கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் குருநாதன் கூறியதாவது:தேசிய தபால் வாரத்தை முன்னிட்டு, வரும் 9ம் தேதி உலக தபால் தினம், 10ம் தேதி சேமிப்பு தினம், 11ம் தேதி 'மெயில்' தினம், 12ம் தேதி தபால் தலை சேகரிப்பு தினம், 13ம் தேதி வர்த்தக மேம்பாட்டு தினம், 14ம் தேதி தபால் ஆயுள் காப்பீட்டு தின விழா கொண்டாடப்படுகிறது.

அக்.,10ம் தேதி சேமிப்பு தி னத்தை முன்னிட்டு, அனைத்து தபால் அலுவலகத்திலும் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு, தொடர் சேமிப்பு கணக்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போருக்கான கணக்குகளை அதிகளவில் தொடங்க முயற்சி எடுக்கப்படும். அதிக எண்ணிக்கையில் கணக்கு தொடங்கியுள்ள முதல் மூன்று தபால் அலுவலகங்களுக்கு பரிசு வழங்கப்படும். இதற்கென அனைத்து தபால் ஊழியர்களும் முழு வீச்சில் செயல்பட வேண்டும். தபால் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் சார்பில் ஒரு கணக்காவது துவங்கியிருக்க வேண்டும். கோவை தலைமை தபால் நிலையம், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர் சந்திப்புகளை நடத்தி, நிதித்துறையில் தபால் துறையின் புதிய செயல்பாடுகளை விளக்க வேண்டும். அக்.,11ம் தேதி மெயில் தினத்தன்று, பள்ளி மாணவ, மாணவியர், தபால் நிலையங்களுக்கு நேரில் வந்து, தபால் துறையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.அக்.,12ம் தேதி தபால் தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிக்கு, தலைமை தபால் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓவியப்போட்டி, கடிதம் எழுதும் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. அக்.,14ம் தேதி தபால் ஆயுள் காப்பீடு தினத்தை முன்னிட்டு, அனைத்து தபால் நிலையங்கள், உட்கோட்ட அதிகாரிகளும், காப்பீடு பற்றி வாடிக்கையாளர் மத்தியில் விளக்க வேண்டும். ஒவ்வொரு உட்கோட்டத்திலும், அன்று ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆயிரம் தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளாவது சேகரிக்கப்பட வேண்டும். தபால் வாரத்தை முன்னிட்டு, 'இந்தியா போஸ்ட்' இணையதளத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்துவது என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கும்படியும், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தபால் துறை இணையதளம் மூலமாக, விரைவு தபால், பதிவுத்தபால் போன்றவை சென்று சேருவதை கண்காணிப்பது பற்றியும், இணையம் மூலம் புகார் அளிப்பது பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டப்படும். இவ்வாறு, குருநாதன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us