Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு நிலம் மீட்பு

அரசு நிலம் மீட்பு

அரசு நிலம் மீட்பு

அரசு நிலம் மீட்பு

ADDED : ஆக 18, 2011 09:30 PM


Google News
மூணாறு:மூணாறு அருகே சின்னக்கானல் வில்லேஜில் வேநாடு தாவளம் பகுதியில் ரிசார்ட்டுக்காக நான்கு நிலையில் மூன்று கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தது.

இவற்றை திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜோய் கட்டி வந்தார்.கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் ஆனையிரங்கல் அணை கரையோரம் ரூ. பல கோடி மதிப்பிலான நிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததால், நிலப்பட்டாக்களை வருவாய்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.பட்டாக்கள் போலி என தெரிய வந்தது.

சப்-கலெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் உடும்பன்சோலை தாசில்தார் மோகனன்பிள்ளை கொண்டகுழு கட்டடங்களையும், நிலத்தையும் மீட்டனர்.

போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us