/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/லாரி, ஆம்னி வேன் மோதிவிபத்து: டிரைவர் பலிலாரி, ஆம்னி வேன் மோதிவிபத்து: டிரைவர் பலி
லாரி, ஆம்னி வேன் மோதிவிபத்து: டிரைவர் பலி
லாரி, ஆம்னி வேன் மோதிவிபத்து: டிரைவர் பலி
லாரி, ஆம்னி வேன் மோதிவிபத்து: டிரைவர் பலி
ADDED : ஆக 04, 2011 11:45 PM
சிவகங்கை:சிவகங்கை அருகே லாரி, ஆம்னிவேன் மோதிய விபத்தில், டிரைவர்
பலியானார்.கோவை மாவட்டம் காசிக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன்
ரமேஷ்(30).
இவர் ஆம்னிவேன் டிரைவராக இருந்தார். கடந்த 3ம் தேதி மாலை, தனது
வேனில், தாயமங்கலத்தை சேர்ந்த ஆனந்த் (20),பணிக்கநேந்தலை சேர்ந்த
பிரபாகரனுடன் (17) தாயமங்கலம் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மாலை
4.30 மணிக்கு சாத்தரசன்கோட்டைக்கு வந்தனர். செம்பனூர் விலக்கு அருகே
சென்றபோது, எதிரே சிவகங்கை - இளையான்குடிக்கு சென்ற சிமென்ட் லாரி,
ஆம்னிவேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆம்னிவேன் டிரைவர்
பலியானார். காயமடைந்த ஆனந்த், பிரபாகரன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரி டிரைவர் பெரியகுளம் அப்பாசை,
இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், எஸ்.ஐ., ராஜூ ஆகியோர் கைது செய்தனர்.