/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கணவன், மனைவி போட்டிபெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கணவன், மனைவி போட்டி
பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கணவன், மனைவி போட்டி
பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கணவன், மனைவி போட்டி
பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கணவன், மனைவி போட்டி
ADDED : அக் 05, 2011 12:43 AM
திட்டக்குடி : பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரின் மனைவியும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாலும் கணவருக்காக ஓட்டு கேட்டு வருகிறார்.பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சித் தலைவர் பதவி வேட்பாளராக தி.மு.க., சார்பில் முருகேசன் மனு தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளராக அவரது மனைவி அம்புஜம் மனு தாக்கல் செய்தார்.இதற்கிடையே மனு வாபஸ் தினத்தன்று அம்புஜம் மனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் அவர் சயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் கணவர் தி.மு.க.,சார்பிலும், மனைவியும் ஒரே பதவிக்கு போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்புஜம் தனக்காக ஓட்டு கேட்காமல் தனது கணவர் முருகேசனுக்காக வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.


