Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சேலம்இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது

சேலம்இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது

சேலம்இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது

சேலம்இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது

UPDATED : ஆக 11, 2011 09:56 PMADDED : ஆக 11, 2011 06:34 PM


Google News
சேலம்:அங்கம்மாள் காலனி மற்றும் பரிமியர் ரோலர் மில் ஆகிய வழக்குகளில், போலீஸ் விசாரணைக்கு பறகு, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், மற்றொரு வழக்கில், லட்சுமணன் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார்.அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, ஐந்து ரோடு பரிமியர் ரோலர் மில் நிலம் அபகரிப்பு ஆகிய வழக்குகளில், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆக., 9ம் தேதி, சேலம் மாநகர, மத்திய குற்றப்பரிவு போலீசில் சரண் அடைந்தார்.இன்று மாலை 4.30 மணி வரை லட்சுமணனிடம், போலீசார் விசாரணை செய்த பன், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 5ல் ஆஜர்படுத்தப்பட்டார்.மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு ஜாமின் வழங்கினார். ஜாமின் பெற்று, நீதிமன்ற அறையை விட்டு வெளியேறி, வளாகத்துக்கு வந்த லட்சுமணனை, போலீசார் மீண்டும் கைது செய்தனர்.போலீசார், “லட்சுமணன் மீது மூன்று பரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு, அவரை சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.சேலம் ப்ளூ மவுன்ட்டன் ஓட்டல் மேலாளர் அருள்பாபுவின் ஜாதிப் பெயரைத் திட்டி, மிரட்டி, பணம் பறித்ததாக, இரண்டு ஆண்டுக்கு முன் கூறப்பட்ட புகார் மீது தற்போது நடவடிக்கை எடுத்து, லட்சுமணன் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us