ADDED : ஜூலை 26, 2011 12:47 AM
மதுரை : மதுரை லொயோலா இன்ஸ்டிடியூட்டில் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை (இக்னோ) சமுதாய கல்லூரி படிப்புகளுக்கான துவக்க விழா நேற்று நடந்தது.
இங்கு இக்னோவின் ஓராண்டு டிப்ளமோ தொழில் திறன் படிப்புகளாக ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், ஏ.சி., பிரிஜ் பழுதுநீக்கும் பயிற்சிகள் உட்பட பல பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளை இக்னோ மண்டல இயக்குனர் எம்.சண்முகம் துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள் ஆளுமைத் திறனை வளர்த்து, தொழில் சார்ந்த படிப்பை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். முயற்சி, தன்னம்பிக்கை, நல்ல மனப்பான்மை இதற்கு தேவை,'' என்றார். லொயோலா இன்ஸ்டிடியூட் முதல்வர் ஸ்டீபன் ஜெ.முத்து, கல்வியாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் உட்பட பலர் பேசினர்.