/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்புதிருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்பு
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்பு
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்பு
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 24, 2011 01:16 AM
திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாநநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் சில நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். பாலக்கரை பேலஸ் தியேட்டர் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக இன்ஸ்பெக்டர் செந்தில்மாறனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற நத்தர்ஷா பள்ளி வாசல் தெருவை சேர்ந்தத ரகீம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த ஒன்னேகால் கிலோ கஞ்சா மற்றும் 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மது விற்றதாக குண்டூர் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 மதுபாட்டில் பறிமுதல் செய்தனர்.


