/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/சிறந்த சேவைக்கான விருது மன்னை ஜே.சி.ஸ்., வழங்கல்சிறந்த சேவைக்கான விருது மன்னை ஜே.சி.ஸ்., வழங்கல்
சிறந்த சேவைக்கான விருது மன்னை ஜே.சி.ஸ்., வழங்கல்
சிறந்த சேவைக்கான விருது மன்னை ஜே.சி.ஸ்., வழங்கல்
சிறந்த சேவைக்கான விருது மன்னை ஜே.சி.ஸ்., வழங்கல்
ADDED : அக் 08, 2011 11:51 PM
மன்னார்குடி: மன்னார்குடி ஜே.சி.ஸ்., சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த சமூக பணி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா பின்லே மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.ஜே.சி.ஸ்., தலைவர் ராஜகுமார் தலைமை வகித்தார்.
ஜே.சி.ஸ்., மண்டல தலைவர் சரவணகுமார், மண்டல செயலாளர் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., அம்பிகாபதி பங்கேற்று பேசினார். அஞ்சல்த்துறையில் சிறப்பாக பணி செய்தமைக்காக சீலன்ராஜ், தீயணைப்புத்துறையில் 31 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு அதிக அளவில் கடன் உதவிகள் வழங்கிய சிட்டி யூனியன் மேலாளர் வெங்ட்ரமணி, அதிக அளவில் கராத்தே மாணவர்களை உருவாக்கிய கராத்தே மாஸ்டர் கியோஸி ரங்கநாதன், øகிள் மெக்கானிக் ராமமூர்த்தி, ஆட்டோ டிரைவர் பாலசுப்பிரமணியன், மின்சார வாரிய பொறியாளர் ரகுபதி, டீசல் சிக்கனத்தை சிறப்பாக கடைப்பிடித்த டிரைவர் பாஸ்கர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.மேலும் 30 ஆண்டுகள் கல்வி சேவையிலும் 15 ஆண்டுகள் தலைமையாசிரியராக பணியாற்றி பல சாதனைகளை படைத்த தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேதுராமனுக்கு கல்வித்துறையிலும், மன்னார்குடி அரசு மருத்துவமனை செவிலியர் மலர் கொடிக்கு சுகாதாரத்துறையிலும், சிறந்த மக்கள் பணிக்காக துப்பரவு தொழிலாளர் முருகையன் உட்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.முன்னாள் தலைவர்கள் கலைசெல்வன், ராஜகோபாலன், வெங்கடேசன், துணை தலைவர்கள் முருகபூபதி, செல்வகுமார், இயக்குனர் செல்வகுமார், பொருளாளர் கமலப்பன், உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.


