ADDED : ஆக 07, 2011 09:09 AM
காளஹஸ்தி : காளஹஸ்தி அருகே உள்ள சீத்தாராம்பேட்டையில் லாரியும் ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் காளஹஸ்தியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி சென்று விட்டு திரும்பும் போது இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்கள் டைடல் பார்க்கில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.