/உள்ளூர் செய்திகள்/தேனி/லஞ்ச லாவண்யமின்றி அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்லஞ்ச லாவண்யமின்றி அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்
லஞ்ச லாவண்யமின்றி அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்
லஞ்ச லாவண்யமின்றி அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்
லஞ்ச லாவண்யமின்றி அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்
ADDED : அக் 07, 2011 10:45 PM
உத்தமபாளையம் : உ.அம்மாபட்டி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு லஞ்ச லாவண்யமின்றி கொண்டு சேர்ப்பேன் என உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் உ.அம்மாபட்டி 5வது வார்டு ஒன்றிய கவுன்சில் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.எம்.
பரமன் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வில் பாரம்பரியமாக இருந்து நற் பெயர் பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். 1984 முதல் கட்சிப்பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராகவும், தற்போது மாவட்ட பிரதிநிதியாகவும் பொறுப்பில் உள்ளார்.முதல் முறையாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.அவர் கூறியதாவது;உ. அம்மாபட்டி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரங்கசாமி கவுண்டர் தோட்டத்திலிருந்து வேளாத்தேவன் வீடு வழியாக கோம்பை செல்லும் பாதையை தார்சாலையாக மாற்றுவேன். சாலமலை பெருமாள் கோயில் பாதை மலையடிவாரம் வரை புதிதாக போடப்படும். ஊர் முழுவதும் நவீன கழிப்பறைகள், அனைத்து தெருக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பற்றாக்குறையின்றி செய்து தரப்படும். கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைய ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி துவங்கவும், அம்மாபட்டியிலிருந்து உத்தமபாளையம் வரை மினி பஸ் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மாபட்டியிலிருந்து சாத்தான் குளம் செல்லும் பாதை தார்ச்சாலையாக மாற்றப்படும்.ஆரம்ப காலத்திலிருந்தே குடிநீர் வசதியின்றி உள்ள அம்பாசமுத்திரம், கருவேலம்பட்டிக்கு தனி குடிநீர் திட்டம் ஏற்படுத்தி பற்றாக்குறையில்லாத வினியோகம் செய்யப்படும். மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவு செய்யவும், அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கவும் பாடுபடுவேன்.அரசின் இலவச பொருள்கள் ஆட்டோ மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும். மக்களின் குறைகளை கேட்க நேரடியாக தேடிச்சென்று சந்திப்பேன். குறைகளை எந்த நேரமும் கூறலாம். அரசின் உதவித்தொகைகள், ரேசன்கார்டு உள்ளிட்டவைகள் பெறுவதற்கு மக்கள் எனது அலுவலகத்தில் மனு கொடுக்கலாம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். தெரு விளக்கு சாக்கடை மேற்பார்வை செய்து சரி செய்வேன். அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் தேவையான கட்டடங்கள் ரேஷன் கடைகள் ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு கூறினார். தொடர்புக்கு: 93642-67123.


