/உள்ளூர் செய்திகள்/திருச்சி/17 வயது பெண்ணுக்கு "டும்..டும்..'! திருமணத்தை தடுத்த அதிகாரிகள் : கல்லூரிக்கு அனுப்பிய கலெக்டர்17 வயது பெண்ணுக்கு "டும்..டும்..'! திருமணத்தை தடுத்த அதிகாரிகள் : கல்லூரிக்கு அனுப்பிய கலெக்டர்
17 வயது பெண்ணுக்கு "டும்..டும்..'! திருமணத்தை தடுத்த அதிகாரிகள் : கல்லூரிக்கு அனுப்பிய கலெக்டர்
17 வயது பெண்ணுக்கு "டும்..டும்..'! திருமணத்தை தடுத்த அதிகாரிகள் : கல்லூரிக்கு அனுப்பிய கலெக்டர்
17 வயது பெண்ணுக்கு "டும்..டும்..'! திருமணத்தை தடுத்த அதிகாரிகள் : கல்லூரிக்கு அனுப்பிய கலெக்டர்
ADDED : ஜூலை 15, 2011 12:04 AM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பெண் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மணப்பாறை தவளை வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பக்கவுண்டர்- சின்னக்கண்ணு தம்பதியினர் மகன் சரவணன். இவருக்கும் கரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி- பழனியம்மாள் தம்பதியினரின் மகள் சுமித்ரா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது மைனர் பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடப்பதாக திருச்சி சைல்டு லைனுக்கு (1098) புகார் வந்தது. உடனடியாக சுமித்ரா படித்த பள்ளியில் அவரின் சான்றிதழ் பெற்று, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கொடி, சைல்டுலைன் உறுப்பினர் ஜெயந்திராணி ஆகியோர் நேரடியாக திருமணம் நடக்கும் கிருஷ்ண கவுண்டனூரில் விசாரித்தனர். விசாரணையில், பெண்ணுக்கு 17 வயதுதான் என்று பெற்றோர் ஒப்புக் கொண்டனர். அதைத்தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினரும் கலெக்டர் ஜெயஸ்ரீ முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலெக்டர் எடுத்துக் கூறினார். வயது 18 பூர்த்தியான பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். கலெக்டரின் ஆலோசனைபடியும், சுமித்ரா விருப்பப்படியும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.