/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பணம் வைத்து சூதாடிய14 பேர் அதிரடி கைதுபணம் வைத்து சூதாடிய14 பேர் அதிரடி கைது
பணம் வைத்து சூதாடிய14 பேர் அதிரடி கைது
பணம் வைத்து சூதாடிய14 பேர் அதிரடி கைது
பணம் வைத்து சூதாடிய14 பேர் அதிரடி கைது
ADDED : ஜூலை 17, 2011 02:22 AM
கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், பணம் வைத்து சீட்டாடிய, 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.நாகரசம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பணம் வைத்து சீட்டாடுவதாக, போலீஸாருக்கு தகவல் வந்தது.
எஸ்.ஐ., கபிலன் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.வேலம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, பணம் வைத்து சீட்டாடிய சின்னசாமி, அச்சுதன், சுப்பன், சேட்டு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நான்கு பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.அதே போல் தட்டக்கல் மலையடிவாரத்தில் போலீஸார் ரோந்து சென்றபோது, அங்கு சீட்டாடி கொண்டிருந்த மாதப்பன், ரவி, உதயகுமார், சசிக்குமார், ஞானம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நான்கு பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.