ADDED : ஆக 01, 2011 10:25 AM
சென்னை: சென்னையில் தொழில் முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், தொழில் முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இக்கலந்துரையாடலில், 'ஸ்கோப் இன்டர் நேஷனல்' அமைப்பின் இணை நிறுவனர் சந்துரு நாயர், ஆதித்யா நடராஜா, இச்பியான் வணிக ஆலோசகர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரம் குறித்தும், வாடிக்கையாளர்களுடன் இருக்க வேண்டிய உறவுநிலை குறித்து விளக்கம் அளித்தனர்.மேலும், வியாபாரப் பொருட்களை நிலைப்படுத்துவது, இன்றைய நவீன <<<<உலகில் பொருட்களை சந்தைப்படுத்துவது, அதில் ஏற்படுகின்ற சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது போன்றவை குறித்து, தொழில் முனைவோர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்த கலந்துரையாடல் நடந்தது.