ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
சூலூர் : சூலூர் அருகே 'கிரைண் டிங்' மிஷினில் கல் உடைந்து தொழிலாளிகள் இருவர் பலியாகினர்.
சூலூர், பீடம்பள்ளியை சேர்ந்தவர் கருப்பசாமி(45), ஒரிசா மாநிலத்தை சேர்ந்த போசாந்த் (27). இருவரும் கள்ளப்பாளையத்தில் உள்ள காஸ்டிங் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை 'கிரைண்டிங் மிஷினில்' வேலை செய்யும் போது, 'கிரைண்டிங்' கல் உடைந்து கருப்பசாமி,போசாந்த் உள்ளிட்ட இருவரின் தலைமீது விழுந்தது. கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் போசாந்த் இறந்தார்.