நரிக்குடி : நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் விபத்துகள், தற்கொலை முயற்சி, கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி, போன்றவை ஏற்படும் போது திருச்சுழியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வர வேண்டும்.
ரோடு சரியில்லாததால் 108 வருவதில் சிரமம் உள்ளது. திருச்சுழியிருந்து நரிக்குடி வர 20 நிமிடங்கள் ஆகிறது. நரிக்குடியிலிருந்து சம்பவ இடத்திற்கு செல்ல கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. நரிக்குடியை மையமாக கொண்டு இங்கு 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும்.