/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனுகடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு
ADDED : செப் 30, 2011 01:49 AM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பிற்கான 6492
பதவியிடங்களுக்கு 24799 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில்
உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர்,
ஊராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி சேர்மன், நகராட்சி உறுப்பினர், டவுன்
பஞ்சாயத்து சேர்மன், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 6492
பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதையொட்டி ஏற்கனவே பல்வேறு
பதவியிடங்களுக்காக 12661 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல்
கடைசி நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 199 பேரும்,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1370 பேரும், ஊராட்சி தலைவர்
பதவிக்கு 1821 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7118 பேரும்,
நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 783 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு 42
பேரும், டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு 111 பேரும், டவுன் பஞ்சாயத்து
வார்டு உறுப்பினர் பதவிக்கு 694 பேரும் ஆக மொத்தம் ஒரே நாளில் 12138 பேர்
மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில்
மொத்தம் உள்ள 6492 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24799 பேர் மனு தாக்கல்
செய்தனர்.