/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வையம்பட்டி தி.மு.க., ந.செ., மனைவி கைது :மரம் வெட்டி கடத்திய வழக்கில் போலீஸ் அதிரடிவையம்பட்டி தி.மு.க., ந.செ., மனைவி கைது :மரம் வெட்டி கடத்திய வழக்கில் போலீஸ் அதிரடி
வையம்பட்டி தி.மு.க., ந.செ., மனைவி கைது :மரம் வெட்டி கடத்திய வழக்கில் போலீஸ் அதிரடி
வையம்பட்டி தி.மு.க., ந.செ., மனைவி கைது :மரம் வெட்டி கடத்திய வழக்கில் போலீஸ் அதிரடி
வையம்பட்டி தி.மு.க., ந.செ., மனைவி கைது :மரம் வெட்டி கடத்திய வழக்கில் போலீஸ் அதிரடி
மணப்பாறை: மரம் வெட்டி கடத்திய வழக்கில் வையம்பட்டி தி.மு.க., நகர செயலாளரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலம் திருச்சி - திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் அமைந்ததால், நிலத்தின் மதிப்பு பன்மடங்கு கூடி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பை எட்டியது. ஜாமல்முகமது வெளிநாடு சென்றுவிட்டார். கடந்தாண்டு அமீர்பாட்ஷா இந்நிலத்தை அத்துமீறி ஆக்ரமித்து, குடியேறினார். இதுதொடர்பாக வையம்பட்டி போலீஸில் ஜமால்முகமது மனைவி பர்கத்நிஷா புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் இல்லாததால், திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பர்கத்நிஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பானதை அடுத்து, சில நாட்களுக்கு முன், திருச்சி எஸ்.பி., லலிதாலட்சுமியிடம் பர்கத்நிஷா புகார் அளித்தார். எஸ்.பி., லலிதாலட்சுமி இப்புகார் குறித்து விசாரிக்க வையம்பட்டி போலீஸாருக்கு உத்தரவிட்டார். வையம்பட்டி போலீஸார், அமீர்பாட்ஷா, அவரது மனைவி மெகருனிஷாபேகம் மகன் யாஸர் அராஃபத் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, அவ்விடத்திலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தென்னை, கொய்யா, மா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி, கடத்தியதாக பர்க்கத்நிஷா வையம்பட்டி போலீஸில் மற்றொரு புகார் அளித்தார். அதன்பேரில், அமீர்பாட்ஷா, மனைவி மெகருனிஷா, மகன்கள் ராஜாமுகமது, ஷாஜகான், அப்துல்காதர், யாஸர்அராஃபத், முகமதுஜின்னா உள்ளிட்ட 10 பேர் மீது வையம்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்தனர். அமீர்பாட்ஷாவின் மனைவி மெகருனிஷாபேகத்தை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். ஏற்கனவே நில ஆக்ரமிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், மற்ற ஒன்பது பேர் தலைமறைவாக உள்ளனர். மணப்பாறை டி.எஸ்.பி., தொல்காப்பியன், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீஸார் தலைமறைவான அமீர்பாட்ஷா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


