/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தேவை அறிந்து சேவை செய்வேன் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சுதேவை அறிந்து சேவை செய்வேன் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
தேவை அறிந்து சேவை செய்வேன் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
தேவை அறிந்து சேவை செய்வேன் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
தேவை அறிந்து சேவை செய்வேன் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''மக்கள் தேவைகளை அறிந்து சேவை செய்வேன்,'' என, திண்டுக்கல் நகராட்சி 27வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் சே.இளையகுமார் கூறினார்.
திண்டுக்கல் பாறைமேட்டுத் தெரு, என்.எஸ். கே.நகரில் அவர் பேசியது: வேட்பாளராக அறிவித்த முதல்வர், அமைச்சர் விஸ்வநாதனுக்கு நன்றி. நகராட்சியில் ஊழலற்ற நிர்வாகத்தை தர அ.தி.மு.க., வுக்கு வாய்ப்பளியுங்கள். 150 ஆண்டுகளாக போராடிய மக்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் பட்டா கிடைத்துள்ளது. இதனால் வார்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 27வது வார்டு முழுவதும் ஆத்தூர் குடிநீர் கிடைக்க பொதுக்குழாய் அமைத்தும், பிளாஸ்டிக் தொட்டி, கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும். அரண்மனை குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டு பராமரிக்கப்படும். கழிப்பிடங்கள், ஓடைகள், புதுப்பித்து சுத்தம் செய்து பராமரிக்கப்படும். பாறைமேட்டு தெருவில் பிளாஸ்டிக் தொட்டி, பொது குழாய் அமைக்கப்படும். பழுதுபட்டுள்ள ரோடுகள் சரி செய்யப்படும். மின் கம்பங்கள் சீரமைக்கப்படும். பாறைமேட்டு தெரு, என்.எஸ். கே.நகர், ஆனந்தவிநாயகர் கோவில் தெரு, சிவன்கோவில் தெரு, மங்களபுரம், சேவியர் தெரு ஆகிய பகுதிகளல் சிமென்ட் ரோடு, தார் ரோடு, தெருவிளக்கு, ஓடை வசதிகள், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைத்து தரப்படும்.முதியோர், விதவை, ஊனமுற்றோர், கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை பெற்றுத் தரப்படும். அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், எவ்வித செலவும் இன்றி பெற்றுத் தருவேன், என்றார்.


