/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/"பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளத்தில் மண் அகற்றம்"பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளத்தில் மண் அகற்றம்
"பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளத்தில் மண் அகற்றம்
"பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளத்தில் மண் அகற்றம்
"பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளத்தில் மண் அகற்றம்
ADDED : ஜூலை 17, 2011 02:20 AM
ஓசூர்: பெங்களூரு ரயில்வே கோட்டத்தில் ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட மாதிரி ரயில்வே ஸ்டேஷன்களில் தென்மேற்கு ரயில்வே துறை மூலம் ரயில் விபத்துகளை தடுக்க நவீன முறையில் 'பேலட் கிளினிக் மிஷின்' மூலம் ரயில் தண்டவாளங்களில் ஜல்லிகளில் கலக்கும் மண்ணை பிரித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கி நடக்கிறது.
தென்மேற்கு ரயில்வே துறையில் ரயில் விபத்துகளை தடுக்க தண்டவாளம் பராமரிப்பு பணிகள், கண்காணிப்பு பணிகள் ரயில்வே போலீஸார், ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.இதையும் மீறி அவ்வப்போது தண்டவாளம் விரிசல், மண் கலந்த ஜல்லி அதிர்வுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் ரயில்வே விபத்துகளை முற்றிலும் தடுக்க நாடு முழுவதும் தற்போது ரயில்வே தண்டவாளங்களில் உள்ள விரிசல் மற்றும் ஜல்லிகளுடன் சேர்ந்துள்ள மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு ரயில்வே கோட்டத்தில் முதற் கட்டமாக ஓசூர் மாதிரி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஓசூர்-பெங்களூரு வழித்தடத்தில் நவீன முறையில் 'பேலட் கிளினிக் மிஷின்' மூலம் தண்டாவாளத்தில் உள்ள ஜல்லிகள், அவற்றுடன் கலந்த மண் ஆகியவற்றை தனித்தனியாக சலித்து பிரித்து ஜல்லிகளை மட்டும் தண்டவாளத்தில் நிரப்பும் பணி நேற்று முதல் துவங்கி நடக்கிறது.பெங்களூரு கோட்ட முதன்மை பொறியாளர் விஜய் அகர்வால் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து முதன்மை பொறியாளர் விஜய் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:ரயில்வே டிராக்கில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜல்லிகளை பராமரித்து மாற்ற வேண்டும். பொதுவாக ஜல்லிகளுடன் மண் சேரும்போது தண்டவாளம் இருக ஆரம்பிக்கும். இதனால், தண்டவாளத்தில் ரயில்கள் செல்லும்போது ரயில் இன்ஜின், பெட்டிகளுக்கு பிடிப்பு கிடைக்காமல் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதனால், ரயில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், ஜல்லிகளில் மண் சேரும் போது, ரயில்கள் வேகமாக டிராக்கில் செல்ல முடியாது. இது போன்ற பல்வேறு விபத்து அபாயத்தை தடுக்கும் வகையில் ஜல்லிகளை பராமரித்து மண் அப்புறப்படுத்தும் பணி நவீன எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.