காஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷன் கருத்து எங்களுடைய கருத்து அல்ல: ஹசாரே
காஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷன் கருத்து எங்களுடைய கருத்து அல்ல: ஹசாரே
காஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷன் கருத்து எங்களுடைய கருத்து அல்ல: ஹசாரே
UPDATED : அக் 14, 2011 12:55 PM
ADDED : அக் 14, 2011 12:39 PM
புதுடில்லி: காஷ்மீர் மாநிலம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக பிரபல வழக்கறிஞரும், அன்னா குழுவில் இடம்பெற்றவருமான பிரஷாந்த் பூஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த அன்னா ஹசாரே, காஷ்மீர் குறித்து பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து எங்களுடைய கருத்தை பிரதிபலிப்பவை அல்ல. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அம்மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன். எங்கள் குழு சார்பாக கருத்தை வெளியிடும் முன் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தங்களுடைய கருத்துக்களை வெளியிட அனுமதி தேவையில்லை. காஷ்மீர் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் சரியானவை அல்ல. எதிர்காலத்தில் அவர் இடம்பெறுவாரா, மாட்டாரா என்பது பற்றி எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


