Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கரும்பு உற்பத்தியாளர்சங்கம் கலெக்டரிடம் மனு

கரும்பு உற்பத்தியாளர்சங்கம் கலெக்டரிடம் மனு

கரும்பு உற்பத்தியாளர்சங்கம் கலெக்டரிடம் மனு

கரும்பு உற்பத்தியாளர்சங்கம் கலெக்டரிடம் மனு

ADDED : செப் 08, 2011 02:47 AM


Google News
ராசிபுரம்:'விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ராசிபுரம் தாலுகா பகுதியை மோகனூர் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கரும்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெயராஜன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:மோகனூர் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட விவசாயிகளின் கருத்துகளை கேட்காமலேயே, எங்கள் ஏரியாவை தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு பிரித்து விட்டனர். நாங்கள், மோகனூர் சர்க்கரை ஆலையில் பங்கு அங்கத்தினர்களாக உள்ளோம்.

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் ஆலை பெருந்தொலைவில் உள்ளதால் பயணம் நேரம், செலவு அதிகமாகிறது. அந்த ஆலையில் கரும்பு கொடுத்தால் மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு பிறகுதான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ராசிபுரம் தாலுகா கரும்பு உற்பத்தியாளர்கள் விருப்பத்திற்கு இணங்க எங்கள் பகுதியை மோகனூர் சர்க்கரை ஆலைக்கே ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us