/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/"பூத் சிலிப்' கேட்கும் வேட்பாளர்கள்: தடுமாறும் பேரூராட்சி ஊழியர்கள்"பூத் சிலிப்' கேட்கும் வேட்பாளர்கள்: தடுமாறும் பேரூராட்சி ஊழியர்கள்
"பூத் சிலிப்' கேட்கும் வேட்பாளர்கள்: தடுமாறும் பேரூராட்சி ஊழியர்கள்
"பூத் சிலிப்' கேட்கும் வேட்பாளர்கள்: தடுமாறும் பேரூராட்சி ஊழியர்கள்
"பூத் சிலிப்' கேட்கும் வேட்பாளர்கள்: தடுமாறும் பேரூராட்சி ஊழியர்கள்
ADDED : அக் 11, 2011 02:21 AM
ஊத்துக்கோட்டை : பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 'பூத் சிலிப்'களை, கட்சி வேட்பாளர்கள் கேட்பதால், ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி க்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஓட்டு போடும் பொதுமக்களுக்கு, தங்கள் ஓட்டுள்ள பகுதிகள் அடங்கிய துண்டு சீட்டுகள், தேர்தலின் போது, கட்சியினர் வழங்குவர். தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், அரசு தரப்பில் உள்ளாட்சி நிர்வாகத்தினர், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அந்தந்த வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கி வருகின்றனர். நகராட்சி, பேரூராட்சி ப திகளில், இதேபோல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, 'பூத் சிலிப்'களை வழங்கி வருகின்றனர். இதில் சில வேட்பாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சிலிப்புகளை ஊழியர்களிடம் கேட்டு நச்சரிக்கின்றனர். இதனால், ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். இதேபோல், ஒவ்வொரு பகுதிகளிலும் நீடிப்பதாக, உள்ளாட்சி ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


