/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச திருமண மண்டபம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிஇலவச திருமண மண்டபம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
இலவச திருமண மண்டபம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
இலவச திருமண மண்டபம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
இலவச திருமண மண்டபம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 10, 2011 10:25 PM
மேட்டுப்பாளையம் : ''ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நகராட்சி சார்பில் இலவச திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் நாசர் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்.மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் நாசர் போட்டியிடுகிறார்.
இவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதாவது:முதல்வர் அறிவித்துள்ள அனைத்து நலத் திட்டங்களும் பயனாளிகளுக்கு கிடைக்க பாடு படுவேன். வளர்ச்சி பணிகள் செய்து சிறந்த நகராட்சியாக மாற்ற முயற்சிப்பேன். இடநெருக் கடியில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை, புதிய கட்டடத்தில் விரிவுபடுத்தவும், அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சிப்பகுதியில் இலவச திருமண மண்டபம் கட்டுவேன். சாந்தி நகரில் ரயில்வே கேட் அமைக்கவும், நகரில் பூங்கா, விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம் அமைக் கவும் முயற்சி எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் சுகாதாரம் பேணிக்காக்கப்படும், கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைவில் கொண்டுவர நடவ டிக்கை எடுப்பேன்.இவ்வாறு தேர்தல் வாக்குறுதியில் கூறியுள் ளார்.


